2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

உலக இருபதுக்கு-20இன் நாளைய போட்டிகள்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 22 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இடம்பெற்று வரும் உலக இருபதுக்கு-20 தொடரின் ஆண்களுக்கான நாளைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இங்கிலாந்து மோதவுள்ளதுடன், இந்திய அணியை எதிர்த்து பங்களாதேஷ் எதிர்த்தாடவுள்ளது. பெண்களுக்கான இன்றைய போட்டியில், அயர்லாந்து அணியை தென்னாபிரிக்கா எதிர்த்தாடவுள்ளது.

ஆண்களுக்கான தொடரின் நாளைய முதற் போட்டியாக, இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள குழு ஒன்று போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இங்கிலாந்து ஆடவுள்ளது. இதுவரையில், இரண்டு போட்டிகளில் பங்குபற்றி ஒரு தோல்வி, ஒரு வெற்றியுடன் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு, அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு இப்போட்டி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மறுகணம், தமது இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தாலும் போராட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள அணிக்கெதிராக வெற்றியைப் பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளது.

அடுத்து, இரவு 7.30 மணிக்கு பெங்களூரில் இடம்பெறவுள்ள குழு இரண்டு போட்டியொன்றில், இந்தியாவும் பங்களாதேஷும் மோதவுள்ளன. இதில், இந்திய அணி, இதுவரையில் ஒரு தோல்வி, ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில், இந்திய அணியின் துடுப்பாட்டா வரிசையில் நான்காமிடத்தில் தடுமாறி வரும் ரெய்னாவுக்கு பதில் யுவ்ராஜ் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுகணம், பெண்கள் பிரிவில், சென்னையில் இடம்பெறவுள்ள குழு ஏ போட்டியொன்றில் அயர்லாந்தும் தென்னாபிரிக்காவும் மோதவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X