2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

உலக இருபதுக்கு-20: நாளைய போட்டிகள்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 24 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இடம்பெற்றுவரும் உலக இருபதுக்கு-20 தொடரின் ஆண்களுக்கான நாளைய போட்டிகளில், அவுஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் ஒரு போட்டியில் மோதவுள்ளதோடு, அடுத்த போட்டியில் தென்னாபிரிக்காவும் மேற்கிந்தியத்தீவுகளும் மோதவுள்ளன.

இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு மொஹாலியில் இடம்பெறவுள்ள குழு இரண்டுப் போட்டியொன்றில், அவுஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று, அவுஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா, குறைந்த ஓட்ட விகிதத்தில் வென்றாலே பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்ல முடியும். மறுகணம், இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறுவதுடன், அவுஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான போட்டி காலிறுதிப் போட்டியாக மாறும்.

மறுகணம், தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான குழு ஒன்று போட்டியொன்று இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால், மேற்கிந்தியத்தீவுகள் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெறும். மறுகணம், அவ்வணி தோல்வியடைந்தாலும் ஆப்கானிஸ்தானுடனான அடுத்த போட்டியில் வெற்றிபெற்றால் அவ்வணி அரையிறுதிக்குத் தகுதி பெறும். மறுகணம், ஒரு வெற்றி, ஒரு தோல்வி முடிவுகளைக் கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கு, இப்போட்டியில் வெற்றி பெற்றால் மாத்திரமே அரையிறுதிக்கான வாய்ப்புக்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X