2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்

Super User   / 2010 ஜூன் 02 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து நடத்தும் 2011ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இணையதளம் மூலன்மான டிக்கெட் விற்பனை ஆரம்பமாகியுள்ளது.

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி முதல் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

2007ஆம் ஆண்டு மேற்கிந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது விளையாட்டு மைதான அரங்குகள் ரசிகர்கள் கூட்டமின்றி வெரிச்சோடிக் கிடந்தன. டிக்கெட்களின் விலை அதிகமாக இருந்தமையே இந்த நிலைமைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்திய ஐ.சி.சி, ரசிகர்களை கவரும் வகையில் டிக்கெட் விலையை நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே உறுதி அளித்தப்படி டிக்கெட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--