2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

ஊக்கமருந்தால் மீண்டும் சிக்கலில் கென்யா

Gopikrishna Kanagalingam   / 2016 ஜூலை 10 , பி.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊக்கமருந்துப் பாவனை தொடர்பாக தடகள விளையாட்டின் முன்னணி நாடுகளுள் ஒன்றான கென்யாவுக்கு ஏற்கெனவே அழுத்தங்கள் காணப்பட்டதோடு, முன்னணி வீர, வீராங்கனைகள் சிலர், அதன் காரணமாகத் தடை செய்யப்பட்டிருந்தனர்.

ஜேர்மனிய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றும் பத்திரிகையொன்றும் இணைந்து நடத்திய புலனாய்வு நிகழ்ச்சியில், கென்யாவின் ஊக்கமருந்துப் பாவனை தொடர்பான புதிய ஆதாரங்கள் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதே தொலைக்காட்சியே, ரஷ்ய வீரர்கள் சம்பந்தமான ஊக்கமருந்துப் பாவனையை வெளிப்படுத்தி, அந்நாட்டுக்குத் தடையைப் பெற்றுக் கொடுத்திருந்தது.

கென்யாவின் ஐடன் நகரிலுள்ள முன்னணி வீரர்களுக்கான பயிற்சிக்கூடத்தில், ஊக்கமருந்துப் பாவனை உச்ச அளவில் காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர் போன்று நடித்து, அந்தப் பயிற்சி முகாமுக்குள் சென்ற ஊடகவியலாளர் ஒருவர், மறைக்கப்பட்ட கமெரா மூலம் அங்கு நடப்பவற்றைப் படம்பிடித்துள்ளார். அதில், ஊக்கமருந்துகள், மிக இலகுவாகக் கிடைக்கப்பெறச் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு, அங்கு காணப்படும் வைத்தியர்கள், விளையாட்டு வீரராக நடிக்கும் ஊடகவியலாளருக்கு ஊக்கமருந்துகளை வழங்க முன்வருவதும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

அதிலொரு வைத்தியர், பிரித்தானியாவைச் சேர்ந்த தடகள வீரர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு, ஊக்கமருந்துகளை வழங்கியுள்ளதாகக் கூறுவதோடு, மூன்று மாதங்களுக்குள் உயர்வான பெறுபேறுகளைப் பெற முடியுமெனவும் தெரிவித்தார். அத்தோடு, ஊக்கமருந்துச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டாலும், அவர்கள் கண்டுபிடிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவிக்கிறார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .