Shanmugan Murugavel / 2016 மார்ச் 24 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷோன் வொற்சன், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது இடம்பெறும் உலக இருபதுக்கு-20 தொடரின் முடிவிலேயே ஓய்வுபெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
கடந்தாண்டு இடம்பெற்ற ஆஷஸ் தொடரின் முடிவில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஷேன் வொற்சன், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். எனினும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், கடந்தாண்டு செப்டெம்பருக்குப் பின்னர், அவர் பங்குபற்றியிருக்கவில்லை.
இந்நிலையிலேயே, உலக இருபதுக்கு-20 தொடரின் பின்னர், சர்வதேசப் போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வுபெறுவதாக, 34 வயதான ஷேன் வொற்சன் அறிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் எதிர்பார்க்கப்பட்டளவு திறமையை வெளிப்படுத்தியிருக்காத அவர், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில், அவுஸ்திரேலியாவின் முக்கிய வீரராகத் திகழ்ந்தார். அவுஸ்திரேலியா சார்பாக 59 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய ஷேன் வொற்சன், 190 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 56 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
9 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Oct 2025