2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

கட்லினை சாடிய போல்ட்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 24 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டனில் இடம்பெற்ற ஆண்டுப் பூர்த்திப் போட்டிகளின் 200 மீற்றர் போட்டியில் வெற்றி பெற்ற ஆறு தடவை ஒலிம்பிக் சம்பியனான உசைன் போல்ட், சக போட்டியாளரான அமெரிக்காவின் ஜஸ்டின் கட்லினை சாடியுள்ளார்.

ஜமைக்காவின் ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளிலிருந்து விலகிய பின்னர், முதன்முறையாக போட்டிகளில் பங்குபற்றிய 29 வயதான போல்ட், போட்டித் தூரத்தை 19.89 செக்கன்களில் கடந்து வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில், மருத்துவ விலக்கினைப் பெற்ற போல்ட், ஒலிம்பிக்குக்கு தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கட்லினும் பிறரும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து கருத்துத் தெரிவித்த போல்ட், தன்னைப் பொறுத்த வரையில் இது நகைச்சுவை என்றும், தான் இதை மரியாதைக் குறைவாக உணர்ந்ததாகவும், நான் தகுதிகாண் போட்டிகளிலிருந்து பின்வாங்கியதாக அவர்கள் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் தான் அதிசிறந்தவன் என்பதை நிரூபித்ததாகத் தெரிவித்துள்ள போல்ட், தான் கேள்விப்பட்டபோது சிரித்ததாகவும், குறிப்பாக ஜஸ்டின் கட்லின் தொடர்பில் ஏமாற்றமடைந்ததாக போல்ட் தெரிவித்துள்ளார்.

போல்ட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், அவர் அமெரிக்கராக இருந்திருந்தால் அது கிடைத்திருக்காது என்று கட்லின் சாடியிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .