2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

கைவிடப்பட்டது பங்களாதேஷ் - அவுஸ்திரேலியா தொடர்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைகாலவரையறையற்ற ரீதியில் பிற்போடுவதாக, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 9ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள தொடருக்காக, கடந்த திங்கட்கிழமை அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்படவிருந்த அவுஸ்திரேலியா, பாதுகாப்புக் காரணங்களுக்காக அதைத் தற்காலிகமாகப் பிற்போட்டிருந்த நிலையிலேயே, தற்போது காலவரையறையற்ற ரீதியில் பிற்போட்டுள்ளது.

வீரர்களின் பாதுகாப்பே முன்னுரிமையாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, வேறு வழிகள் இருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X