2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

சம்பியன்ஸ் கிண்ணத்திலிருந்து வெளியேறியது செல்சி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 10 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ணத்திலிருந்து, இறுதிப் பதினாறு அணிகளுக்கான சுற்றுடன் தற்போதைய இங்கிலாந்து பிறீமியர் லீக் சம்பியன்களான  செல்சி வெளியேறியது.

பிரான்ஸின் பரிஸில், பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியின் மைதானத்தில் இடம்பெற்ற முதல் சுற்றுப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றிருந்த பரிஸ் செயிண்ட் ஜெர்மைன், கடந்த புதன்கிழமை (09), செல்சி அணியின் மைதானமான ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ்ஜில் இடம்பெற்ற போட்டியில் மீண்டும் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணி, மொத்தமாக, 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியின் 16ஆவது நிமிடத்திலும் 67ஆவது நிமிடத்திலும் பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியின் அட்ரியன் ரபியோட்டும் ஸல்டான் இப்ராமோவிக்கும் கோல்களைப் பெற்றதோடு, செல்சி சார்பாக பெறப்பட்ட கோலை, போட்டியின் 27ஆவது நிமிடத்தில் டியகோ கோஸ்டா பெற்றார்.

இப்போட்டியின் நாயகனாக ஸல்டான் இப்ராமோவிக் தெரிவாகியிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .