2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

'சல்மான் பட் மீண்டும் வேண்டும்'

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 19 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சல்மான் பட், பாகிஸ்தான் அணிக்குள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டுமென, அவ்வணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் முன்னாள் பயிற்றுநருமான வக்கார் யுனிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்பொட் ஃபிக்சிங் குற்றத்துக்காகச் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் கிரிக்கெட்டிலிருந்து தடை விதிக்கப்பட்ட சல்மான் பட், அந்தத் தண்டனைகள் நிறைவுபெற்ற பின்னர், போட்டிகளில் மீண்டும் பங்குபற்றிவருகிறார். சிறப்பாக ஓட்டங்களைப் பெற்றும் வருகிறார்.

இந்நிலையிலேயே, 2010ஆம் ஆண்டில் ஸ்பொட் ஃபிக்சிங் இடம்பெற்ற போது, தலைவராக இருந்து அதை நடத்திய சல்மான் பட்டை, மீண்டும் அணியில் சேர்க்க வேண்டுமென, அப்போட்டியில் பயிற்றுநராக இருந்த வக்கார் யுனிஸ் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .