2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

சிந்துவுக்கு அரையிறுதியில் தோல்வி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 18 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் நட்சத்திர பூப்பந்தாட்ட வீராங்கனை பி.வி.சிந்து, துபாய் உலக சுப்பர்சீரிஸ் இறுதிப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து, அத்தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

தென்கொரியாவின் சுங் ஜி ஹையுனை எதிர்கொண்ட பி.வி.சிந்து, முதலாவது செட்டை 15-21 என இழந்த போதிலும், இரண்டாவது செட்டை 21-18 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். தீர்க்கமானதான மூன்றாவது செட்டில், 15-21 என்ற புள்ளிகள் கணக்கில், சிந்து தோல்வியடைந்தார்.

இத்தொடரின் குழுநிலைப் போட்டிகளில் 3 போட்டிகளில் விளையாடிய சிந்து, 2 போட்டிகளின் வெற்றிபெற்று, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--