2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

ஜெரோம் டெய்லர் ஓய்வு

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 12 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ளதாக, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எனினும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவதற்கு அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

32 வயதான ஜெரோம் டெய்லர், 2003ஆம் ஆண்டு தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டதோடு, 13 ஆண்டு காலப்பகுதியில், 46 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே பங்குபற்றி, 34.46 என்ற சராசரியில் 59.6 என்ற "ஸ்ட்ரைக் ரேட்"இல், 130 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

18 வயதில் அறிமுகத்தை மேற்கொண்ட போதிலும், காயங்கள் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட ஜெரோம் டெய்லர், 2009 தொடக்கம் 2014 வரை, டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியிருக்கவில்லை. 2014ஆம் ஆண்டு மீள இணைந்த டெய்லர், ஓரளவு சிறப்பாக விளையாடியிருந்த போதிலும், அண்மையில் நிறைவடைந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2 விக்கெட்டுகளை மாத்திரமே கைப்பற்றியிருந்த நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மாத்திரம் கவனஞ்செலுத்த முடிவு செய்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .