2021 மே 06, வியாழக்கிழமை

ஜோ வில்பிரட் சொங்கோ தோல்வி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று ஆரம்பித்த சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல்நாளிலேயே, பிரான்ஸைச் சேர்ந்த ஜோ வில்பிரட் சொங்கா அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

இத்தொடருக்காக 8ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்த அவர், ஒஸ்திரியாவைச் சேர்ந்த ஹெய்டர் மாரெரிடம் 6-7, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

போட்டியில் உடற்தகுதிப் பிரச்சினையால் அவதிப்பட்டிருந்த அவர், போட்டியின் நடுவே மருத்துவச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

ஏனைய போட்டிகளில், இத்தாலியின் அன்ட்ரியஸ் செப்பியை எதிர்கொண்ட பெல்ஜியத்தின் டேவிட் கொபின், 6-2, 6-3 என்ற செட் கணக்கிலும், ஸ்லோவாக்கியாவின் மார்ட்டின் கிளிஸனை எதிர்கொண்ட இத்தாலியின் பபியோ போகினோ, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .