Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 மார்ச் 15 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூதாட்டச் சங்கிலிகளுடன் கொண்டிருந்த தொடர்புகள் பற்றி இருபதுக்கு மேற்பட்ட முன்னணி டென்னிஸ் வீரர்கள் விசாரிக்கப்படவேண்டும் என இத்தாலிய வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
போட்டிகளை நிர்ணயம் செய்ததாக சந்தேகிக்கப்படும் சூதாடிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரங்களில் முன்னணி டென்னிஸ் வீரர்களின் பெயர்கள் காணப்பட்டதாக ரொபேர்ட்டோ டீ மார்ட்டினோ தெரிவித்துள்ளார். இதில், டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசையில் முதல் இருபது இடங்களில் உள்ள இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில், போடிடோ ஸ்டரஸ், டேனியலி பிராசியலி ஆகிய இரண்டு டென்னிஸ் வீரர்கள் மட்டுமே விசாரணைக்குட்படுத்தப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்களும் விசாரணைக்குட்படுத்தப்படவேண்டும் என டீ மார்ட்டினோ தெரிவித்துள்ளார். தவிர, தான் சேகரித்த ஆதாரங்களை வைத்து மேலும் நடவடிக்கைகளை டென்னிஸ் அதிகாரிகள் எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இத்தாலிய டென்னிஸ் வீரர்களையும் சூதாடிகளையும் உள்ளடக்கிய சந்தேகத்துக்கிடமான போட்டி நிர்ணயாம் தொடர்பாக, இரண்டு வருடங்களாக டீ மார்ட்டினோ விசாரணை நடத்தி வருகின்றார். இவரது விசாரணையில், வீரர்களுக்கும் சூதாடிகளுக்குமிடையிலான இணைய உரையாடல்களும் அலைபேசி உரையாடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சூதாடிகளால், இருபதுக்கு மேற்பட்ட இத்தாலியரல்லாத வீரர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டதாகவும், அவர்கள் டென்னிஸ் ஒழுங்குப் பிரிவால் விசாரிக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வீரர்களின் அடையாளத்தை இவர் வெளிப்படுத்தியிருக்காத போதும், அவர்கள் இரண்டாம் தர நிலையிலுள்ள வீரர்கள் இல்லையென்றும் முக்கியத்துவத்தை கொண்ட வீரர்கள் எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago