2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

டெல்லி டெயார்டேவில்ஸ் தலைவராக சகீர் கான்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 29 , மு.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 2016ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான டெல்லி டெயார்டேவில்ஸ் அணியின் தலைவராக சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு டெல்லி டெயார்டேவில்ஸ் அணியில் இணைந்த சகீர் கான், அவ்வணி அவ்வாண்டு விளையாடிய பதின்நான்கு போட்டிகளில் ஏழு போட்டிகளில் விளையாடிய அவர், ஒரு ஓவருக்கு 6.45 என்ற ரீதியில் விட்டுக்கொடுத்து, 22.28 என்ற ஓட்ட சராசரியில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில், டெல்லி டெயார்டேவில்ஸ் அணிக்குத் தலைமை தாங்குவது பாரிய கௌரவம் என சகீர் கான் தெரிவித்துள்ளார். தவிர, டெல்லி டெயார்டேவில்ஸ் அணியின் வழிகாட்டுநரான ராகுல் ட்ராவிட்டும் சகீர் கானின் நியமனத்தை வரவேற்றுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியணி சார்பாக விளையாடிய சகீர் கான், கடந்த ஒக்டோபர் மாதம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X