2021 மே 18, செவ்வாய்க்கிழமை

டுவர் டி பிரான்ஸிலிருந்து விலகினார் கவென்டிஷ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 20 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் சில வாரங்களில் பிரேஸிலின் றியோ டீ ஜெனீரோவில் ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான, தனது தயார்படுத்தல்களில் கவனம் செலுத்தும் பொருட்டு, இடம்பெற்றுவரும் டுவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்டத் தொடரின் எஞ்சியுள்ள ஐந்து கட்டங்களிலிருந்தும் பெரிய பிரித்தானியாவின் மார்க் கவென்டிஷ் விலகியுள்ளார்.

இந்த வருட டுவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்டத் தொடரின் நான்கு கட்டங்களை வென்ற 31 வயதான கவென்டிஷ், மொத்தமாக 30 கட்டங்களில் வெற்றி பெற்று, அதிக வெற்றி பெற்றவர்களில் பெல்ஜிய ஜாம்பவானான எட்டி மேர்க்ஸுக்கு அடுத்த இடத்தில் காணப்பாடுகிறார்.

இம்முறையுடன் தனது மூன்றாவது ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள கவென்டிஷ், தனது முதலிரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் எந்தவொரு பதக்கத்தினையும் வெல்லத் தவறியிருந்தார்.

இந்நிலையில், டுவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்டத் தொடரிலிருந்து விலகும் முடிவினை மிகுந்த கவலையுடனேயே எடுத்ததாக கவென்டிஷ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 100 புள்ளிகளுக்கு அதிகமாகப் பெற்றுள்ள ஸ்லோவாக்கியாவின் பீற்றர் சாகன், பரிஸில் இடம்பெறவுள்ள கட்டத்துக்கு செல்வாராயின், தொடர்ச்சியாக , ஐந்தாவது தடவையாக டுவர் டி பிரான்ஸ் சைக்கிளோட்டத் தொடரில் பச்சை சீருடையை பெற்றுக் கொள்வார். ‌

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .