2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

திருமண பந்தத்தில் இணைந்தார் தோனி

Super User   / 2010 ஜூலை 05 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி (வயது 28), நேற்று திருமண பந்தத்தில் இணைந்தார். தனது பள்ளித் தோழியான சாக்ஷி சிங் ராவத்(23) என்பவரையேயே இவர் மணந்துகொண்டார்.

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன் தினம் டேஹ்ராடூனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில், இவர்களது திருமணம் எதிர்வரும் ஒக்டோபரில் நடக்கலாம் என கூறப்பட்டது.

ஆனால், நேற்று திடீரென உத்தரகாண்ட் தலைநகர் டேஹ்ராடூனில் உள்ள பண்ணை வீட்டில் தோனி-சாக்ஷி சிங் ராவத் ஆகியோரின் திருமணம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--