2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

தென்னாபிரிக்கக் குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 14 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் தென்னாபிரிக்கக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட குழாமாகவே இக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில், இதுவரை தென்னாபிரிக்கா அணிக்காக விளையாடியிருக்காத மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான தெனுய்ஸ் டி ப்ரூய்ன் இடம்பெற்றுள்ளார். 24 வயதான இவர், தென்னாபிரிக்காவின் உள்ளூர்க் கழகமான நைட்ஸின் தலைவராவார். 32 முதற்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 48.73 என்ற சராசரியில் 2,354 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட குழாமில் இடம்பெற்றிருந்து, காயமடைந்த ரீலி றொஸோவுக்குப் பதிலாகவே டி ப்ரூய்ன் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில், ஏ.பி டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்கல் ஆகியோரும் காயம் காரணமாக குழாமில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

இதேவேளை, விலாவென்பு உபாதை காரணமாக அவுஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் பங்கேற்க முடியாமல் போன வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் வெய்ன் பார்னல் குழாமுக்குத் திரும்பியுள்ளார். இதேவேளை, அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பகலிரவுப் போட்டியில் விளையாடிய இடதுகை சுழற்பந்து வீச்சாளர் தப்ரையாஸ் ஷம்ஷி குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். 

தென்னாபிரிக்கா, இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பிக்கிறது.

குழாம்: பப் டு பிளெஸி (அணித்தலைவர்), கைல் அபொட், ஹஷிம் அம்லா, டெம்பா பவுமா, ஸ்டீபன் குக், தெனுய்ஸ் டி ப்ரூய்ன், குயின்டன் டி கொக், ஜீன் போல் டுமினி, டீன் எல்கர், கேஷவ் மஹராஜ், வெய்ன் பார்னல், வேர்ணன் பிளாந்தர், கஜிஸ்கோ றபடா

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .