2021 மே 15, சனிக்கிழமை

தோல்விக்கு மத்தியில் காதல்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து, றோமானியா அணிகளுக்கிடையிலான போட்டியில் றோமானிய அணி 10-44 என்ற புள்ளிகள் கணக்கில் படுதோல்வி அடைந்திருந்த போதிலும், அவ்வணியின் வீரரான ப்ளோரின் சுருகியு மாத்திரம் மகிழ்ச்சியடைந்த வீரராக வெளியேறியிருந்தார்.

தோல்வியின் பின்னர், வெம்ப்ளி விளையாட்டரங்கில் வைத்து, தனது காதலியான அலெக்ஸான்ட்ராவுக்கு திருமணம் செய்வதற்கான கோரிக்கையை முன்வைத்தார். அலெக்ஸான்ட்ராவின் பிறந்த நாளாகவும் அது அமைந்திருந்ததால், பிறந்தநாள் பரிசாக அது அமைந்தது.

மைதானத்தில் வைத்து அவர் விடுத்த கோரிக்கையை அவரது காதலி ஏற்றுக் கொண்டதோடு, இருவரும் நீண்ட நேரமாகக் கட்டியணைத்தபடி காணப்பட்டனர்.

தனது சக வீரர்கள் முன்னிலையிலேயே இக்கோரிக்கையை ‡ப்ளோரின் முன்வைத்திருந்த நிலையில், சிறிது நேரத்தின் பின்னர் அவர்கள் அனைவரும் வந்து இருவரையும் வாழ்த்திவிட்டுச் சென்றனர். இவர்களிருவரும் அடுத்தாண்டு திருமணம் முடிக்க எதிர்பார்த்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .