2021 மே 10, திங்கட்கிழமை

நினைவுகூரப்பட்ட நமீபியாவின் ரேமண்ட் வான் ஸ்‌கூன்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 22 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது இருபத்தைந்தாவது வயதில் அகால மரணத்தை தழுவிய, இருபது-20 போட்டிகளில் நமீபியாவின் சிறந்த துடுப்பாட்ட வீரராக விளங்கிய ரேமண்ட் வான் ஸ்‌கூனை, அவரது சக வீரர்கள், நமீபியா கிரிக்கெட் அதிகாரிகள் நினைவுகூர்ந்திருந்தனர்.

கிரிக்கெட் தென்னாபிரிக்காவின் மாகாண ஒருநாள் சலஞ் தொடரின், வொன்டேர்ஸ் ப்ரீ ஸ்டேட் அண்ணியுடான குழு பி போட்டியொன்றில் பங்கேற்று, பதினைந்து ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த விக்கெட் காப்பாளர், துடுப்பாட்ட வீரரான வான் ஸ்கூன், நிலைகுலைந்து களத்தில் வீழ்ந்திருந்ததுடன் அம்புலன்சில் உள்ளூர் வைத்தியாசாலை ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஐந்து நாட்களாக வைத்தியசாலையிலேயே இருந்த அவர், எப்போதும் மீள நினைவுக்கு திரும்பியிருக்கவில்லை என்பதுடன் கடந்த வெள்ளிக்கிழமை (20) மரணமடைந்தார்.

நமீபியாவுக்காக 70 போட்டிகளில் பங்கேற்றிருந்த வான் ஸ்கூன், 29.24 என்ற சராசரியில் 1550 ஓட்டங்களை குவித்து, இருபது-20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த நமீபியா வீரராக விளங்கியதோடு, 92 முதற்தரப் போட்டிகளில் பங்குபற்றி 27.40 என்ற சராசரியில் 4303 ஓட்டங்களை குவித்து, முதற்தரப் போட்டிகளில் நமீபியா சார்பாக அதிக ஓட்டங்களை குவித்த இரண்டாவது வீரராக விளங்கியதோடு, 103 பிரிவு ஏ போட்டிகளில் பங்குபற்றி 29.08 என்ற சராசரியில் 2618 ஓட்டங்களை குவித்து, நமீபியா சார்பாக அதிக ஓட்டங்களை குவித்தவர்களில் மூன்றாமவராக விளங்கினார். அத்தோடு, நமீபியா சார்பாக 265 போட்டிகளில் பங்குபற்றி, நமீபியா சார்பாக அதிக போட்டிகளில் பங்குபற்றிய சாதனையையும் கொண்டிருக்கின்றார்.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X