2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து செரினா வில்லியம்ஸ் வெளியேற்றம்

Super User   / 2010 ஜூன் 03 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி போட்டியில் சமந்தா, டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸை 6- 2, 6- 7, 8- 6 என்ற வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக இரு வீராங்கனைகளும் கடுமையாக போராடினர். இறுதியில் சமந்தா வெற்றி பெற்றார். முன்னதாக அவர் ஜஸ்டின் ஹெனினுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.

இதேவேளை, பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் அரையிறுதியிப் போட்டியில் விளையாட ஆஸ்திரேலிய  சமந்தா ஸ்டோஸர், செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிக் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--