Editorial / 2017 ஜூலை 16 , பி.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டியின் 3ஆவது நாள் முடிவில், சிம்பாப்வே அணி சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், இலங்கை அணி, அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், தனது 2ஆவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் சிம்பாப்வே அணி, நேற்றைய நாள் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இந்த இனிங்ஸின் ஆரம்பத்தில், ரங்கன ஹேரத்தின் சுழலில் வீழ்ந்த சிம்பாப்வே அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 23 ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகளை இழந்து 59 ஓட்டங்களுடனும் தடுமாறிய நிலையில் காணப்பட்டது. ஆனால், 6ஆவது விக்கெட்டுக்காக 86 ஓட்டங்கள் பகிரப்பட்டதோடு, 7ஆவது விக்கெட்டுக்காக, பிரிக்கப்படாத 107 ஓட்டங்கள் பகிரப்பட்டுள்ளன.
சிறப்பாகப் பந்துவீசிவந்த ஹேரத், விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியாமல் போக, ஏனைய பந்துவீச்சாளர்களால் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியாமல் போனது. இதனால், இலங்கை அணி, அழுத்தத்தைச் சந்தித்துள்ளது.
துடுப்பாட்டத்தில், சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிவரும் சீகன்டர் ராஸா, ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களுடன் காணப்படுகிறார். அவருக்கான சிறந்த ஆதரவை வழங்கிவரும் மல்கொம் வோலர், ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களுடன் காணப்படுகிறார். அவருக்கு முன்னராகத் துடுப்பெடுத்தாடிய பீற்றர் மூர், 40 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ரங்கன ஹேரத், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டில்ருவான் பெரேரா, லஹிரு குமார ஆகியோர், தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் முதல் இனிங்ஸில், சிம்பாப்வே அணி 356 ஓட்டங்களைப் பெற, இலங்கை அணி பதிலளித்து, 346 ஓட்டங்களையே பெற்றது.
எனவே, 4 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில் சிம்பாப்வே அணி, 262 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது.
13 minute ago
46 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
46 minute ago
1 hours ago
3 hours ago