2021 மே 06, வியாழக்கிழமை

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் மீண்டும் மலிக்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் டெஸ்ட் குழாமில், சகலதுறை வீரர் ஷொய்ப் மலிக் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 16ஆவது வீரராகவே இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக பாகிஸ்தான் அணியில் இடம்பெறாமலிருந்த இவர், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்காக அண்மையில் சேர்க்கப்பட்டு, அதன் பின்னர் விளையாடிய 11 போட்டிகளில் ஒரு சதம், 3 அரைச்சதங்கள் (ஆட்டமிழக்காத 96 உள்ளிட்ட) உட்பட 100 என்ற சராசரியில் ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இதன் காரணமாக, டெஸ்ட் குழாமில் அவரைச் சேர்க்குமாறு பாகிஸ்தான் அணியின் முகாமையாளர் இன்திகாப் அலாம் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்தே, டெஸ்ட் குழாமில் இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இறுதியாக மலிக், 2010ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியொன்றில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .