2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

பெடரர் சம்பியனானார்

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிற்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-6, 6-3 என்ற செட் கணக்கில் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை தோற்கடித்து, இரண்டாவது தடவையாக தொடர்ச்சியாக மேற்கு மற்றும் தெற்கு பகிரங்க பட்டத்தை கைப்பற்றி விம்பிள்டன் பகிரங்க இறுதிப்போட்டியில் தோல்வியுற்றதுக்கு பழிதீர்த்துக்கொண்டார்.

இந்த வெற்றியுடன் சின்சினாட்டி பட்டத்தை ஏழாவது தடவையாக கைப்பற்றி பெடரர் சாதனை புரிந்தார். இந்த வெற்றியுடன் தனது பரமவைரியான ஜோகோவிச்சுக்கு எதிராக 21-20 என்ற வெற்றி விகிதத்தை அடைந்துள்ளார்.

இந்த தோல்வியால் ஜோகோவிச் ஒன்பது ஏடிபி மாஸ்டர்ஸ் பட்டங்களையும் கைப்பற்றும் கனவு கலைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .