2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸிலிருந்து வொஸ்னியாக்கி வெளியேற்றம்

Shanmugan Murugavel   / 2016 மே 18 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கியும், எழுச்சியடைந்துவரும் வீராங்கனையான சுவிற்ஸர்லாந்தின் பெலின்டா பென்சிச்சும், பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இருவருமே, காயம் காரணமாகவே இத்தொடரிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

34ஆம் நிலை வீராங்கனையான வொஸ்னியாக்கி, அவரது வலது கணுக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக வெளியேறியுள்ளதோடு, 8ஆம் நிலை வீராங்கனையான பெலின்டா, கீழ் முதுகு உபாதை காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக, பெண்கள் டென்னிஸ் சங்கம் தெரிவித்தது.

அண்மைக்காலமமாகவே டென்னிஸ் அரங்குகளில் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்திய வொஸ்னியாக்கி, அவுஸ்திரேலியப் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து முதலாவது சுற்றில் வெளியேற்றப்பட்டதோடு, தரவரிசையிலும் மோசமான நிலையில் காணப்படுகிறது. கடந்த மாதமும் கூட, அவருக்கு கணுக்கால் உhபதை ஏற்பட்டிருந்தது.

19 வயதான பென்சிச், அவரது இறுதி ஐந்து போட்டிகளில் நான்கில், முதற்சுற்றுப் போட்டிகளில் தோல்வியடைந்திருந்த நிலையில், பிரெஞ்சுப் பகிரங்கப் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டமை, அவருக்குப் பாதிப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .