Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2015 நவம்பர் 19 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பயணமாகவுள்ள இங்கிலாந்துக் குழாமிலிருந்து, அண்மைய காலங்களில் ஓட்டங்களைக் குவிக்கத் தடுமாறி வரும் இங்கிலாந்து அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் இயன் பெல் நீக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நிக் கொம்ப்டன், மூன்றாமிலக்க வீரர் கரி பலன்ஸ், வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து குழாமுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர். தவிர, இதுவரை இங்கிலாந்து சார்பாக எந்தவகைப் போட்டிகளிலும் பங்கேற்காத இடது கை வேகப்பந்துவீச்சாளர் மார்க் பூட்டிட்டும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் காயத்துக்குள்ளான வேகப்பந்துவீச்சாளர்களான ஸ்டீவன் பின், மார்க் வூட் குழாமில் இடம்பெற்றிருக்காதநிலையில், சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் குழாமில் இடம்பெற்றுள்ளார். தவிர, ஸ்டீவன் பின் காயமடைந்ததைத் தொடர்ந்து குழாமுக்கு அழைக்கப்பட்ட கிறிஸ் ஜோர்டான், தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.
இது தவிர, பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் பங்குபற்றியிருந்த அதில் ரஷீட்டும் குழாமிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்ற நிலையில், ஸபார் அன்சாரிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் அணிக்கு அழைக்கப்பட்டிருந்த சகலதுறை வீரர் சமித் பட்டேல் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இதேவேளை இங்கிலாந்தின் அண்மைய அனைத்துத் தொடர்களுக்குமான குழாம்களில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் லியாம் பிளங்கெட் குழாமிலிருந்து அதிர்ச்சிகரமாக நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் குழாம்-அலஸ்ட்டீர் குக், மொயின் அலி, ஜேம்ஸ் அன்டர்சன், ஜொனி பியர்ஸ்டோ, கரி பலன்ஸ், ஸ்டூவர்ட் புரோட், ஜோஸ் பட்லர், நிக் கொம்ப்டன், மார்க் பூட்டிட், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், சமித் பட்டேல், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் டெய்லர், கிறிஸ் வோக்ஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .