2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியிலும் சிம்பாப்வேயிடம் இந்தியா படுதோல்வி

Super User   / 2010 ஜூன் 04 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியில்  சிம்பாப்வே அணியை எதிர்க்கொண்ட இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. சிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி, சிம்பாப்வே அணியை எதிர்கொண்டது.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களை எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய சிம்பாப்வே அணி, 38.2 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதனால் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை, இந்திய அணி கிட்டத்தட்ட இழந்து விட்டது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளில், ஒரு வெற்றி மட்டுமே பெற்ற இந்திய அணி 4 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளது.

அத்துடன் சிம்பாப்வே அணி 9 புள்ளிகளையும் இலங்கை அணி 5 புள்ளி அணிகளையும் பெற்று முதலிரண்டு இடங்களில் உள்ளன. இந்நிலையில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேற வேண்டுமாயின், இலங்கை அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் "போனஸ்' புள்ளியுடன் வெற்றி பெற வேண்டும்.

அதேவேளை, இலங்கை அணி, சிம்பாப்வே அணியிடம் தோல்வியடைய வேண்டும். ஒருவேளை சிம்பாப்வே அணியை, இலங்கை அணி வீழ்த்தும் பட்சத்தில், மூன்று அணிகளும் தலா 9 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் இற்திச்சுற்ற்க்கு முன்னேறும் அணிகள் தீர்மானிக்கப்படும். தற்போது இந்திய அணியின் ரன் ரேட் மிகவும் மோசமாக இருப்பதால், இற்திச்சுற்ற்க்கு முன்னேறுவது கடினமாகும்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--