Shanmugan Murugavel / 2016 மார்ச் 24 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முதன்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச், உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளதோடு, முன்னணி வீரரான அன்டி மரேயிடமும் கலந்துரையாடியுள்ளார். டென்னிஸில் ஊதியம் தொடர்பான அவரது கருத்தைத் தொடர்ந்தே, அவர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
டென்னிஸில் ஆண்கள், அதிக வருமானத்தைக் கொண்டுவருவதன் காரணமாக, பெண்களை விட ஆண்களுக்கு, அதிக பரிசுத்தொகை வழங்கப்பட வேண்டுமென, நொவக் ஜோக்கோவிச் தெரிவித்திருந்தார். அது, அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, தனது சக வீரர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவருக்கெதிரான விமர்சனத்தை முன்வைத்த அன்டி மரேயுடனும் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
'அவர்களைக் காயப்படுத்தும் அல்லது எதிர்மறையான உட்கருத்துகளைக் கொண்டுவரும் எண்ணங்களை நான் எப்போதும் கொண்டிருக்கவில்லை. பாலினங்களுக்கிடையில் எந்தவிதமான வேறுபாடுகளையும் நான் பார்ப்பதில்லை. விளையாட்டில் சமத்துவத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்" என அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக, அன்டி மரேயுடன் மிகவும் வெளிப்படையாகக் கலந்துரையாடியதாகவும், செரினா வில்லியம்ஸ், கரோலின் வொஸ்னியாக்கி, அனா இவானோவிச் ஆகியோருக்கும் தனது கருத்துகளை அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
'ஏதாவதொரு வகையில், என சக பெண் டென்னிஸ் வீராங்கனைகளை நான் காயப்படுத்தியிருந்தால், அதற்கு மன்னிப்புக் கோருகிறேன். அவர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருக்கிறேன். அவர்கள் அனைவர் மீதும், உயர்ந்த மதிப்பைக் கொண்டிருக்கிறேன்" என அவர் குறிப்பிட்டார்.
18 minute ago
8 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
8 hours ago
28 Oct 2025