2021 மே 06, வியாழக்கிழமை

மறேயை வென்றார் நடால்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 19 , மு.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டனில் இடம்பெற்று வரும் தொழில்முறை டென்னிஸ் வீரர்களுக்கான கூட்டமைப்பின் உலக தொடர் இறுதிகளின் குழுநிலைப் போட்டிகளில் உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானிய வீரர் அன்டி மறே, தனது பெறுபேறுகளில் வீழ்ச்சியைச் சந்தித்து உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலிடம் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டுள்ளார்.

முதலாவது செட்டை கடுமையாகப் போராடிக் கைப்பற்றிய நடால், இரண்டாவது செட்டை இலகுவாகக் கைப்பற்றியிருந்தார்.

இந்தப் போட்டிக்கு பின் இடம்பெற்ற அடுத்த போட்டியில் தற்போதைய பிரெஞ்சு பகிரங்க சம்பியனும் தரவரிசையில் நான்காம் இடத்தில் உள்ளவருமான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டியான் வொர்விங்கா, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் தரவரிசையில் ஏழாம் இடத்திலுள்ள டேவிட் பெடரைத் தோற்கடித்தார்.

இதன் மூலம், இன்று டேவிட் பெரருடன் இடம்பெறவுள்ள தனது இறுதி குழுநிலைப் போட்டிக்கு முன்பே அரையிறுதிப் போட்டிகளில் தனக்கான இடத்தை நடால் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, தனது இறுதி குழு நிலைப் போட்டியில் வொர்விங்காவுடன் மோதவுள்ள மறேயும் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை கொண்டிருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .