2021 மே 06, வியாழக்கிழமை

முதலிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டட்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளின் புள்ளிகள் அட்டவணையில், மன்செஸ்டர் யுனைட்டட் அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

சண்டர்லான்ட் அணிக்கெதிரான போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டட் அணி வெற்றிபெற, டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் மன்செஸ்டர் சிற்றி அணி தோல்வியடைந்ததையடுத்தே, இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சண்டர்லான்ட் அணிக்கும் மன்செஸ்டர் யுனைட்டட் அணிகளுக்கிடையிலான போட்டியில் மெம்பிஸ் தேபாய், வெய்ன் றூணி, ஜுவான் மாட்டா ஆகியோர் கோல்களைப் பெற, யுனைட்டட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மறுபுறத்தில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் அணியின் எரிக் டியர், டொபி அல்டெர்வெய்ரெல்ட், ஹரி கேன், எரிக் லமேலா ஆகியோர் ஹொட்ஸ்பர்ஸ் சார்பாகக் கோல்களைப் பெற, அவ்வணி 4-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி அணியைத் தோற்கடித்தது. சிற்றி சார்பாக ஒரே கோலை, கெவின் டி புரையுன் பெற்றுக் கொடுத்தார்.

இதேவேளை, லெய்செஸ்டர் சிற்றி அணியை எதிர்கொண்ட ஆர்சனல் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற, நியூகாசில் - செல்சி அணிகளுக்கிடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .