2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

முன்னிலையில் பெல்ப்ஸ், பைல்ஸ்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 15 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டில், கூகிள் தேடுபொறியில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியலில், விளையாட்டு வீரர்களில் நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ், உடற்பயிற்சி வீராங்கனை சிமோன் பைல்ஸ், நீச்சல் வீரர் றயன் லொக்டி ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர். இவர்கள் மூவரும் அமெரிக்கர்களாவர்.

இந்தப் பட்டியலில், டொனால்ட் ட்ரம்ப், ஹிலாரி கிளின்டன் ஆகியோரைத் தொடர்ந்து 3ஆவது இடத்தில் பெல்ப்ஸ் வர, 5ஆவது இடத்தில் பைல்ஸும் 9ஆவது இடத்தில் லொக்டியும் காணப்படுகின்றனர்.

இதில், பெல்ஸ், பைல்ஸ் இருவரும், ஒலிம்பிக்கில் வெளிப்படுத்திய சாதனைகளுக்காக இந்தப் பிரபலத்தைப் பெற்றுக் கொள்ள, றயன் லொக்டியோ, குடித்துவிட்டு ரகளை செய்து, அது தொடர்பாகப் பொய் சொன்னமைக்காக, இந்தப் பிரபலத்தைப் பெற்றுக் கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--