2021 மே 06, வியாழக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகள் பயிற்றுநர் இடைநிறுத்தம்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்றுநரான பில் சிமன்ஸ், அவரது பதவியிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான தொடர், எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், அத்தொடரின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் குழாம் குறித்து, பில் சிமன்ஸ், தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

டுவைன் பிராவோ, கெரான் பொலார்ட் இருவரையும் சேர்ப்பதற்கு அவர் விரும்பிய போதிலும், அவர்கள் சேர்க்கப்படாததையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பலமான ஒருநாள் சர்வதேசக் குழாம் தெரிவுசெய்யப்படவில்லை எனவும், அணித்தெரிவில் வெளியழுத்தங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இக்கருத்துகள் காரணமாக, அவரை இடைநிறுத்தம் செய்வதாகவும், அவ்விடயம் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும்வரை, அவர் இடைநிறுத்தப்பட்டிருப்பார் எனவும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, இலங்கை வரவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் குழாமுடன் சிமன்ஸ் பயணிக்க மாட்டார் எனவும், தேர்வாளர்களில் ஒருவரான முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எல்டின் பப்டிஸ்ட், அவ்வணியின் இடைக்காலப் பயிற்றுநராகப் பதவியேற்பார் எனவும் அறிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .