2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

மேற்கிந்தியதீவுகளுக்கெதிரான போட்டியில் டுமினி இல்லை

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 23 , மு.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இடம்பெற்றும் வரும் உலக இருபதுக்கு-20-இன் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மேற்கிந்தியத்தீவுகளுக்கெதிரான போட்டியில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜெ‌பி டுமினி விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியின்போது களத்தடுப்பில் ஈடுபட்ட டுமினி, பந்தொன்றை துரத்திச் சென்றபோது, பின் தொடைத் தசைநார் பிடிப்பு ஏற்பட்டமை காரணமாக களத்திலிருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில், டுமினி, காயத்திலிருந்து குணமடைந்து எப்போது மீள்வார் எனத் தெளிவாகத் தெரியாதபோதும், இலங்கையணிக்கு எதிராக திங்கட்கிழமை (28) இடம்பெறவுள்ள தென்னாபிரிக்க அணியின் இறுதிக் குழு நிலைப் போட்டிக்காவது டுமினி தயாராகி விடுவார் என தென்னாபிரிக்க அணி நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது.

டுமினி காயமடைந்துள்ளமை காரணமாக அணித் தெரிவின்போது தென்னாபிரிக்க அணி சிக்கலை எதிர்கொள்ளவுள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிரான போட்டி இடம்பெறவுள்ள நாக்பூர் ஆடுகளம், சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகையில், டுமினிக்கு பதிலாக துடுப்பாட்ட வீரர் ஒருவரை சேர்க்கும் பட்சத்தில், அணியில் இம்ரான் தாகீர் மட்டுமே சுழற்பந்துவீச்சாளராக இடம்பெற முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .