Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2015 நவம்பர் 16 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூரோ 2016 கால்பந்தாட்டத் தொடர், இரத்துச் செய்யப்படமாட்டாது என, அந்நிகழ்வின் ஏற்பாட்டாளர் ஜக்ஸ் லம்பேர்ட் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பரிஸில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்தே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட 6 இடங்களில், பிரான்ஸ் அணிக்கும் ஜேர்மனிக்கும் இடையில் கால்பந்தாட்டப் போட்டி இடம்பெற்றுக் கொண்டிருந்த ஸ்டேட் டி பிரான்ஸ் அரங்கும் ஒன்றாகும். அரங்குக்குள் புகுவதற்கு ஆயுததாரிகள் முனைந்த போதிலும், அது தடுத்து நிறுத்தப்பட, அரங்குக்கு வெளியே குண்டு வெடித்திருந்தது.
இந்நிலையில், யூரோ 2016 தொடரின் முதலாவது போட்டியையும் இறுதிப் போட்டியையும் ஸ்டேட் டி பிரான்ஸ் அரங்கே நடாத்தவுள்ள நிலையில், அத்தொடர் இடம்பெறுமா என்ற சந்தேகம் காணப்பட்டது.
ஆனால், கருத்துத் தெரிவித்துள்ள ஜக்ஸ் லம்பேர்ட், 'யூரோ 2016 தொடர் இடம்பெறுமா எனச் சிந்திப்பது, பயங்கரவாதிகளின் விளையாட்டுக்கு ஏற்ப விளையாடுவதாகும்" எனத் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரியில் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நினைவுபடுத்திய அவர், 'ஆபத்தினளவு ஜனவரியில் ஒரு படி மேலே சென்றது, தற்போது இன்னும் மேலே சென்றுள்ளது" என்றார்.
யூரோ 2016 தொடர், மிகவும் பாதுகாப்பான நிலைமைகளில் இடம்பெறுவதற்குத் தேவையான அனைத்து முடிவுகளையும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், விளையாட்டரங்குகளின் பாதுகாப்பும் அதிகரிக்கப்படுமெனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago