2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

லோதா - பி.சி.சி.ஐ மோதல் வலுக்கிறது

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையைச் (பி.சி.சி.ஐ) சீர்திருத்துவது தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட லோதா செயற்குழுவுக்கும் அச்சபைக்கும் இடையிலான முரண்பாடுகள் வலுத்துள்ளன.

சீர்திருத்தம் குறித்த லோதா செயற்குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதற்கு அச்சபை மறுத்த நிலையில், அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், சமர்ப்பிப்பொன்றை மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் அநுரக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோர், லோதா செயற்குழு மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

நாட்டின் கிரிக்கெட்டை முகாமை செய்யக்கூடிய நிபுணத்துவம், லோதா செயற்குழுவுக்குக் கிடையாது எனத் தெரிவித்த அவர்கள், லோதா செயற்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால், ஒட்டுமொத்த கிரிக்கெட் நிர்வாகமே குலைந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளனர். அத்தோடு, சபையின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காக, மேற்பார்வையாளர் ஒருவர் நியமிக்கப்படுவதையும், சபை எதிர்த்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--