2021 மே 18, செவ்வாய்க்கிழமை

லிவர்பூல் பயிற்றுநர் நீக்கம்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிவர்பூல் அணியின் முகாமையாளர் பிரென்டன் றொட்ஜர்ஸ், அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக, அண்மைக்காலமாக வெற்றிகளைப் பெறாத நிலையிலேயே அவர் பதவி விலக்கப்பட்டுள்ளார்.
எவேர்ட்டன் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் 1-1 என்ற சமநிலையான முடிவையே பெற்று, சில மணி நேரங்களல் அவரது பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியானது.

றொட்ஜர்ஸின் ஒப்பந்தம் முறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உடனடியாக விலக்கப்படுவதாகவும் லிவர்பூலின் உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவித்தது. அத்தோடு, றொட்ஜர்ஸூக்குப் பதிலாக இன்னொருவரைத் தெரிவுசெய்யும் பணி ஏற்கெனவே தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, செல்சி அணியின் மோசமான பெறுபேறுகள் காரணமாக அழுத்தத்துக்குள்ளாகியுள்ள முகாமையாளர் ஜொஸ் மொரின்கோ, உடனடியாகப் பதவி விலக்கப்பட மாட்டார் எனத் தெரிகிறது.

ஆனாலும், வீரர்களின் நம்பிக்கையை இழந்தால், உடனடியாகப் பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வீரர்களிடம் தனக்குள்ள நம்பிக்கை பற்றிய தகவல்களை அறிவதற்கு, வீரர்களிடம் நேரில் கேட்குமாறும் வேறு பொய்யான மூலங்களிடமிருந்து தகவல்களைப் பெற வேண்டாமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .