2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

வுகான் பகிரங்க தொடரில் சிமோனா ஹல்ப் அதிர்ச்சித் தோல்வி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வுகான் பகிரங்க டென்னிஸ் தொடரைக் கைப்பற்றக்கூடியவர்களில் முன்னணியில் காணப்பட்ட தரவரிசையில் இரண்டாமிடம் வகிக்கும் ரோமானியாவின் சிமோனா ஹல்ப்பை 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, பிரித்தானியாவின் ஜொகன்னா கொன்டா, காலிறுதிப்போட்டிகளுக்கு முன்னேறியுள்ளார்.

இந்தத் தொடருக்குள் நுழையும்போது தரவரிசையில் 66ஆம் இடத்திலிருந்த கொன்டா, தனது காலிறுதிப்போட்டியில் தரவரிசையில் 24வது இடத்திலுள்ள அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொள்ளவுள்ளார்.

“ எனக்கு இது இரண்டு மணித்தியாலமும் பதினேழு நிமிடங்களும் கொண்ட மிக மிக கடினமான டென்னிஸ்” என்று கொன்டா தெரிவித்துள்ளார். சில பகுதிகளில் நம்பமுடியாத டென்னிசை சிமோனா ஆடியதாகவும், அவரது சிறப்பான பெறுபேற்றில் அவர் இருக்கவில்லையெனவும், தான் உருவாக்கிய சந்தர்ப்பங்களை கைப்பற்றியதையடுத்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் கொன்டா தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்பெயினின் சுவரேஸ் நவரோவைத் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தே வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியிருந்தார்,

முன்னதாக தொடரின் தற்போதைய சம்பியனும், தொடரைக் கைப்பற்றுபவர்களில் மூன்றாமிடத்திலும் காணப்பட்ட செக் குடியரசின் பெற்றா கிவிட்டோவாவை 7-6(3), 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ரொபேர்ட்டா வின்சி தோற்கடித்து அதிர்ச்சியளித்திருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X