2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

'விவ் றிச்சர்ட்ஸ் போன்றவர் கெயில்'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 17 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில், பந்துவீச்சைச் துவம்சம் செய்வதில், மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் தலைவரும் உலகில் தோன்றிய தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான சேர் விவியன் றிச்சர்ட்ஸோடு ஒப்பிடப்படக்கூடியவர் என, அவ்வணியின் பயிற்றுநர் பில் சிமன்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், இங்கிலாந்து அணி விதித்த 183 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக 47 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்த கிறிஸ் கெயில், தனக்கு அணிக்கு இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருந்தார். இதன்போது அவர், 11 ஆறு ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

அது குறித்துக் கருத்துத் தெரிவித்த பில் சமன்ஸ் 'பந்துவீச்சை அவ்வாறு அடித்தாடுவதென்பது சிறப்பானது. அவரோடு (கிறிஸ் கெயில்) நான் ஒப்பிடக்கூடிய எனது காலத்து வீரராக நான் சேர் விவியனைக் குறிப்பிடுவேன். ஏனெனில், பந்துவீச்சை சேர் விவியனும் அவ்வாறு துவம்சம் செய்வார். ஆகவே, பந்துவீச்சைத் துவம்சம் செய்வதில், சேர் விவ் றிச்சர்ட்ஸ்ஸோடு கிறிஸ் கெயில் இருக்கிறார் என நான் நினைக்கிறேன்" என்றார்.

கிறிஸ் கெயில் களமிறங்கும் போது, அவரை 15 ஓவர்கள் துடுப்பெடுத்தாடுமாறு கோருவதாகத் தெரிவித்த சிமன்ஸ், கிறிஸ் கெயில் 15 ஓவர்கள் துடுப்பெடுத்தாடினால், தனது அணி வெற்றிபெறக்கூடிய இலக்குக்கு அருகில் வந்துவிடும் என்பதைத் தான் அறிவார் எனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X