2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ஸ்ரீ லங்கா ரெலிகொம் ஏற்பாட்டில் யாழில் வலைப்பந்தாட்ட போட்டி- 9 அணிகள் பங்கேற்பு

Super User   / 2010 மே 09 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, 9 அணிகளுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகள் யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.

வலைப்பந்தாட்ட சங்கத்தின் ஆதரவில் நடைபெற்ற இந்த போட்டிகளில் வடமராட்சி கல்வி வலையத்தைச் சேர்ந்த வடமராட்சி மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலை, வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி, வலிகாமம் கல்வி வலையத்தைச் சேர்ந்த சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, மருதனார் மடம் இராமநாதன் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, யாழ்ப்பாணம் கல்வி வலையத்தைச் சேர்ந்த கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரி போன்றன பங்குபற்றின.   
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--