2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

ஸ்மித் சதம்; வென்றது ஆஸி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 04 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைக் கொண்ட சப்பல் - ஹட்லி தொடரின் முதலாவது போட்டியில், அவுஸ்திரேலிய அணிக்கு இலகுவான வெற்றி கிடைத்தது. 

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 324 ஓட்டங்களைக் குவித்தது. தனது 7ஆவது சதத்தைப் பெற்ற ஸ்மித், 157 ஓட்டங்களில் 164 ஓட்டங்களைப் பெற்றார். ட்ரவிஸ் ஹெட் 52 (60), மத்தியூ வேட் 38 (22) ஆகியோரும் தங்களது பங்களிப்புகளை வழங்கினர். பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட், மற் ஹென்றி, ஜிம்மி நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வழங்கினர்.

325 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி, 44.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 256 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 68 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. தனது 11ஆவது சதத்தைப் பூர்த்தி செய்த மார்ட்டின் கப்டில், 102 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பெற்றார். தவிர கொலின் முன்றோ 49 (59), ஜிம்மி நீஷம் 34 (36), மற் ஹென்றி 27 (15) ஆகியோரும் தங்களது பங்களிப்புகளை வழங்கினர். பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸல்வூட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிற்சல் ஸ்டார்க், பற் கமின்ஸ், அடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக ஸ்டீவன் ஸ்மித் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--