Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2017 ஜூலை 18 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி, இன்று இடம்பெறவுள்ளது. பிறிஸ்டலில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.
இலங்கை நேரப்படி, மாலை 3 மணிக்கு, இப்போட்டி ஆரம்பிக்கவுள்ளது.
புள்ளிகளின் அடிப்படையில், முதலாவது இடத்தைப் பெற்ற அணிக்கும் 4ஆவது இடத்தைப் பெற்ற அணிக்குமிடையிலான போட்டியாக இது அமையவுள்ளது.
இங்கிலாந்து அணி, தான் விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது. இந்தத் தொடரில், அவ்வணியின் முதலாவது போட்டியாக அமைந்த, இந்திய அணிக்கெதிரான போட்டியிலேயே, இங்கிலாந்து அணி தோல்வியடைந்திருந்தது.
தென்னாபிரிக்க அணி, விளையாடிய 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்ததோடு, 2 போட்டிகளில் தோல்வியடைந்திருந்தது. நியூசிலாந்து அணிக்கெதிரான அவ்வணியின் போட்டி, மழை காரணமாகக் கைவிடப்பட்டிருந்தது.
இரு அணிகளும் குழுநிலையில் சந்தித்போது, இங்கிலாந்து அணி, 68 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றிருந்தது. ஆனால், இங்கிலாந்து அணி 373 ஓட்டங்களைப் பெற, தென்னாபிரிக்க அணி, 305 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. எனவே, இந்தப் போட்டியிலும், தென்னாபிரிக்க அணி, விட்டுக்கொடுக்காமல் விளையாடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தின் டம்மி பியூமொன்ட், 7 போட்டிகளில் 53.14 என்ற சராசரியில் 372 ஓட்டங்களைப் பெற்று, இந்தத் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகிறார்.
ஆனால், தென்னாபிரிக்காவின் டேன் வான் நியேகேர்க், 6 போட்டிகளில் 15 விக்கெட்டுகளுடனும், மரிஸன்னே கப் 6 போட்டிகளில் 12 விக்கெட்டுகளுடனும், முதலிரு இடங்களில் காணப்படுகின்றனர்.
எனவே, இங்கிலாந்தின் பலமிக்க துடுப்பாட்டத்துக்கும், தென்னாபிரிக்காவின் பலமிக்க பந்துவீச்சுக்கும் இடையிலான போட்டியாக, இது அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
5 hours ago
5 hours ago