Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 மார்ச் 26 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகளால் தோற்கடித்த இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்துஅணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களைப் பெற்றது.
ஜொனதன் ட்ரொட் 86 ஓட்டங்களையும் மோர்கன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை பந்துவீச்சாளர்களில் முத்தையா முரளிதரன் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க, திலகரட்ன தில்ஷான் இருவரும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.
திலகரட்ன தில்ஷான் 108 ஓட்டங்களைப்பெற்றார். இது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் பெற்ற 10 ஆவது சதமாகும். இந்த உலகக்கிண்ணத் தொடரில் அவர் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.
உபுல் தரங்க102 ஓட்டங்களைப் பெற்றார். இது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவர் பெற்ற 11 ஆவது சதமாகும்.
இலங்கை அணி 39.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கைஅடைந்தது.
எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
rasvin sainthamaruthu-04 Sunday, 27 March 2011 03:43 AM
மிகேபும் சந்தோசம் இது போல் அனைத்து போட்டிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Reply : 0 0
jaliyath Sunday, 27 March 2011 06:42 PM
இறைவன் நாடினால் இரண்டாவது தடவையும் உலகக்கிண்ணம் நமது நாட்டுக்குள் நுழைவதை யாராலும் தடுக்க முடியாது.
Reply : 0 0
Raasim Central Camp Ampara. 0752524132 Sunday, 27 March 2011 08:02 PM
இதை விட பலம் வாய்ந்த அணிகளுடனும் சிறப்பாக விளையாட என் வாழ்த்துக்கள்.
Reply : 0 0
silvandoo Monday, 28 March 2011 02:17 AM
வெல்ல வேண்டும் என்னும் மனஉறுதி நீங்காத உண்மையான திடமான ஒருங்கிணைந்த எமது அணி நிச்சயம் உலகக் கோப்பையை கைப்பற்றும்.
இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்!!!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
15 minute ago
16 minute ago
31 minute ago