Super User / 2011 மார்ச் 04 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் ஸிம்பாப்வே அணியை நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.
அஹமதாபாத் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 46.2 ஓவர்களில் 162 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களில் டிம் சௌதீ 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டேனியல் வெட்டோரி 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கீல் மில்ஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\
நியூஸிலாந்து அணி 33.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 166 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
	மார்ட்டின் குட்பில் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களையும் பிரெண்டன் மெக்கலம் 76 ஓட்டங்களையும் பெற்றனர்.
	மார்ட்டின் குட்பில் இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.
	 
3 hours ago
3 hours ago
3 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
31 Oct 2025