2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

1996 உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் ஆட்டநிர்ணய சதி? வினோத் காம்ப்ளி சந்தேகம்

Super User   / 2011 நவம்பர் 18 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரின் இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி கூறியுள்ளார்.

அத்தொடரிலேயே இலங்கை அணி உலகக் கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் நடைபெற்ற அப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் மொஹமட் அஸாருதீன், இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 251 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி 34.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 120 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ரசிகர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் போட்டி கைவிடப்பட்டு இலங்கை அணிக்கு வெற்றிப்புள்ளிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அப்போட்டியில் முதலில் களத்தடுப்பு செய்ய இந்திய அணித்தலைவர் அஸாருதீன் தீர்மானித்தமை தனக்கு அதிர்ச்சியளித்ததாக 15 வருடங்கள் கடந்தபின், வினோத் காம்ப்ளி கூறியுள்ளார்.

போட்டிக்கு முன்னதாக நடந்த அணிக்கூட்டத்தின்போது நாணய சுழற்சியில் வென்றால் முதலில் துடுப்பெடுத்தாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்ததாக காம்ப்ளி இந்திய தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

'அந்த போட்டியை என்னால் மறக்வே முடியாது. ஏனெனில் எனது கிரிக்கெட் வாழ்க்கை அதன்பின் முடிந்துவிட்டது.
களத்தில் எனக்கு மறுமுனையிலிருந்து வீரர், நாம் அந்த இலக்கை அடைவோம் எனக்கூறினார். ஆனால் அவர்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்தனர். என்ன நடந்தது எனத் தெரியவில்லை.

சில விசயங்கள் நிச்சயம் குழப்பமானவை. எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன்பின் நான் நீக்கப்பட்டுவிட்டேன். எமது அப்போதைய அணி முகாமையாளர் வடேகர் அனைத்தையும் அறிவார்' என வினோத் காம்ப்ளி கூறினார்.

எனினும் அப்போட்டி முறையாக நடைபெற்றது என அஜித் வடேகர் கூறியுள்ளார்.

'ஏன் அவர் 15 வருடங்களின்பின் திடீரென பேசுகிறார். நான் தேசிய அணியில் நான்கரைவருடம் இருந்தபோது பலதடவை காம்ப்ளியுடன் இரவு உணவு உட்கொண்டுள்ளேன். சந்தேகத்திற்கிடமான ஏதேனும் குறித்து அவர் பேசியிருந்தால் அது குறித்து விசாரிக்குமாறு கிரிக்கெட் சபையை கோரியிருப்பேன்' என வடேகர் கூறினார்.

கம்பிளியின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்க இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் சஞ்சய் ஜாக்டேல் மறுத்துள்ளார்.
மேற்படி போட்டியில் டெண்டுல்கர் 65 ஓட்டங்களைப் பெற்றார். அஸாருதீன் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழழந்தார்.

போட்டி நிறுத்தப்பட்டபோது காம்ப்ளி 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கால் இருந்தார். போட்டி நிறுத்தப்பட்டபோது அவர் களத்திலேயே கண்ணீர்விட்டு அழுதமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0

 • Mz Mohamed Sunday, 20 November 2011 02:14 AM

  ஆட தெரியாதவனுக்கு மேடை வளைச்சலாம்....

  Reply : 0       0

  Kethis Saturday, 19 November 2011 03:30 AM

  ஒரு காலத்தில் சச்சின் வாய் திறப்பார் அப்போது பல உண்மைகள் வெளிவரலாம்.

  Reply : 0       0

  Rauf Saturday, 19 November 2011 05:16 PM

  2011 உலக கோப்பை கூட இந்தியாவுக்கு கிடைத்தது ஆட்ட சதி? அதி கூடிய ஓட்டத்தை எடுத்த இலங்கை அணி இந்தியாவின் முக்கிய விக்கட்டுகளையும் ஆரம்பத்தில் வீழ்த்தியது. இதுவும் ஒருகாலத்தில் theriyavarum.

  Reply : 0       0

  fazal Saturday, 19 November 2011 10:15 PM

  ஓம் ஓம் வினோத் நீங்க அழுததை நாங்க பார்த்து சிரித்தோம். சார்ஜாவில 54 ஓட்டங்களிட்கு all out ஆகினதும் ஆட்ட நிர்ணயமோ?

  Reply : 0       0

  Nijam Tuesday, 22 November 2011 05:07 PM

  15 வருடங்கள் மௌன விரதமோ?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X