2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

20 ஓவர் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

Super User   / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய அணியுடனான ட்வென்ட்டி20 கிரிக்கெட்போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பேர்த்  நகரில்  இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியஅணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களைப்பெற்றது.

பிரட் ஹடின் 35 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கைப் பந்துவீச்சாளர்களில் சுராஜ் ரந்தீவ் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் குமார் சங்கக்கார 41 பந்துகளில் 44 ஓட்டங்களையும் திலகரட்ன தில்ஷான் 34 பந்துகளில் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--