2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்து அணியை வீழ்த்தி பங்களாதேஷ் புதிய வரலாறு

Super User   / 2010 ஜூலை 11 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.

பிரிஸ்டல் நகரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்காதேஷ் அணி 236 ஓட்டங்களைப் பெற்றது. இம்ருல் கயீஸ் 76 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பாக ஜொனதன் ட்ரொட் 94 ஓட்டங்களைப் பெற்றபோதிலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 231 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணிக்கெதிராக எந்தவொருவகை சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் பங்களாதேஷ் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மஸ்ரபி மோர்ட்டஸா இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போது இரு அணிகளும் 1-1 விகிதத்தில் சமநிலையில் உள்ளன. மூன்றாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது.  Comments - 0

  • raja Sunday, 11 July 2010 05:28 PM

    கொளிங்க்வூத் முதல் பந்திலேயே அவுட்டாகி விட்டார் . அம்பயரின் தவறு பலரை கொபத்துக்குல்லாகியது என்றாலும், இறுதி வெற்றி அவர்களுக்கு சந்தோசத்தை கொடுத்திருக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .