2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

வடமாகாண விளையாட்டு போட்டியில் யாழ் மாவட்டம் முதலிடம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 11 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண  கல்வித் தினைக்களத்தினால் மாவட்டப் பாடசாலைகளுக்கு இடையே நடத்திய பெரு விளையாட்டுக்கள் மற்றும்   தடகளப் போட்டியில் யாழ் மாவட்ட அணி 1709 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை தடகளப் போட்டிகள் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தலைமையில் இடம்பெற்றன.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிக் கேடயங்களை கையளித்தார்.

மன்னார் மாவட்டம் 386 புள்ளிகளையும் வவுனியா மாவட்டம் 316 புள்ளிகளையும் பெற்றன.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--