2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

பொவெலை தோற்கடித்தார் உசைன் போல்ட்

Super User   / 2010 ஜூலை 17 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்ற பாரிஸ் டயமன்ட் லீக் மெய்வன்மை விளையாட்டு விழாவின் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் தற்போதைய உலக சாதனையாளரான உசைன் போல்ட், முன்னாள் உலக சாதனையாளரான அசாபா பொவெலை தோற்கடித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் உசைன் போல்ட 9.81 விநாடிகளில் ஓடி முதலிடம் பெற்றார். அசாபா பொவெல் 9.91 விநாடிகளில் ஓடினார். யொஹான் பிளாக் 9.95 விநாடிகளில் ஓடி மூன்றாமிடம் பெற்றார்.

இதன் மூலம் இப்போட்டியின் முதல் மூன்று இடங்களையும் ஜமைக்கா வீரர்களே தட்டிச் சென்றமை விசேடமானதாகும்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .