2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

கிளிபர்ட் றகர் தொடரில் கண்டி விளையாட்டு கழகம், அரை இறுதிக்கு போட்டியிடாமலேயே தெரிவு

Menaka Mookandi   / 2010 ஜூலை 18 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு சம்பியன் பட்டங்களை வென்று இலங்கை றகர் வரலாற்றில் முத்திரை பதித்த அணியான கண்டி விளையாட்டுக் கழகம் இன்று நடைபெறவிருந்த போட்டியில் போட்டியிடாமலேயே வெற்றிவாகைச் சூடியுள்ளது.

கண்டி நித்தவல மைதானத்தில் ஹவ்லொக்ஸ் கழகத்துடனான போட்டிக்கு ஹவ்லொக்ஸ் அணி இன்று சமுகமளிக்காததையடுத்து கண்டி அணி வெற்றி பெற்றதாக அறிவக்கப்பட்டு அரையிறுதிப் போட்டிக்குப் தகுதிபெற்றது.

அரை இறுதிப் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி  கண்டி, நித்தவலை மைதானத்தில் விமானப் படை அணியுடன் இடம் பெறவுள்ளது.
இம்முறை இடம் பெற்ற மும்முரமான லீக் போட்டிகளில் மிகச் சிரமத்திற்கு மத்தியில் கண்டி அணி வெற்றிபெற்றது.

இறுதிப் போட்டியில் சீ.ஆர். அணியுடனும் மற்றொரு போட்டியில் இலங்கை கடற்படை அணியுடனும்  தோல்வியடைந்த போதும் புள்ளி அட்டவணையில் 14.5 புள்ளிகளைப் பெற்றிருந்தது. அதேநேரம் சீ.ஆர், அணியும் 14.5 புள்ளியைப் பெற்றாலும் அதிக ட்ரைகளைப் பெற்ற கண்டி அணிக்கு லீக் கேடயம் வழங்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--