2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ஆஷஸுக்குத் தயாராகிறது ஆஸி.

Super User   / 2010 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துடனான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் குறித்து அவுஸ்திரேலிய அணி இப்போதே சிந்திக்க ஆரம்பித்துவிட்டது.


இங்கிலாந்து வசமுள்ள ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் வெல்வதற்கு அவுஸ்திரேலியா கடுமையாக முயற்சிக்கிறது. இதற்காக அவுஸ்திரேலிய அணியின் சிரேஷ்ட வீரர்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் மெல்போர்னில் இருநாள் செயலமர்வு ஒன்றை அந்நாட்டு கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ளது.


அணித் தலைவர் ரிக்கி பொன்டிங், உபதலைவர் மைக்கல் கிளார்க், அணி நிர்வாகிகள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் இதில் பங்குபற்றவுள்ளனர்.


டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியா எதிர்கொள்ளவுள்ளது. இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய, அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.

எனினும், நம்பவர் மாதம் நடைபெறவுள்ள ஆஷஸ் சுற்றுப்போட்டியே அவுஸ்திரேலிய வீரர்களின் கலந்துரையாடலில் முக்கிய இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


ஆஷஸ் தொடரின் முதல் நவம்பர் 25 ஆம் திகதி பிரிஸ்பேர்ன் நகரில் ஆரம்பமாகவுள்ளது. 

தற்போதைய ஆஷஸ் சம்பியனாக இங்கிலாந்து விளங்குகிறது. எனினும் 1986-87 ஆம் ஆண்டின் பின்னர் இங்கிலாந்து அணி அவுஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் கிண்ணத்தை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--