Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற யாழ். மாவட்ட பாடசாலைகளின் 17 வயதினர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
உடுவில் மகளிர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியும் உடுவில் மகளிர் கல்லூரியும் மோதிக்கொண்டன.
நான்கு பாதி ஆட்டங்களைக்கொண்ட இந்தப் போட்டியில் முதல் பாதி ஆட்டத்தில் உடுவில் மகளிர் கல்லூரி 01:04 புள்ளிகள் என்ற நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இரண்டாம் கால்பாதி ஆட்டத்தில் உடுவில் மகளிர் கல்லூரி 14:13 புள்ளிகளைப் பெற்றது. மூன்றாம் கால் பாதி ஆட்டத்தில் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி 08:05 என்ற புள்ளிகள் என்ற அடிப்படையில் முன்னனியில் இருந்தது.
இறுதி கால் பாதி ஆட்டத்திலும் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி 09:06 என்ற புள்ளிகள் என்ற நிலையில் ஆட்டம் நிறைவு பெற்றது. இதனால், ஆட்ட நிறைவில் உடுவில் மகளிர் கல்லூரி 36:34 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
போட்டியின் ஆட்டநாயகியாக மில்ஸ் கமலினி தெரிவு செய்யப்பட்டார். மூன்றாம் இடத்தை கொக்குவில் இந்துக் கல்லூரி பெற்றுக் கொண்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago